இதுகுரித்து அவருடைய தாயார் மேரியம்மாள்
காவல்துறையினரிடம் புகாரளித்தார். இதையடுத்து சேகரை தேடிக் கண்டுபிடித்து,
சுனிதாவை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்த நிலையில்
இன்று அதிகாலையில் சேகர் காவல்துறையினரிடம் சிக்கினார். எம்.ஜி.ஆர். நகர்
காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சேகர்,
உள்ளகரத்தை அடுத்துள்ள புழுதிவாக்கத்தில் சுனிதாவை தங்க வைத்திருப்பதாக
கூறினார்.
பின்னர் சுனிதாவை எம்.ஜி.ஆர். நகர் காவல்
நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். அப்போது சுனிதா கழிவறைக்கு
செல்ல வேண்டும் என்று கூறினார். காவல் நிலையத்தின் உள்ளேயே இருக்கும்
கழிவறைக்கு அவரை அழைத்துக் கொண்டு தாய் மேரியம்மாள் சென்றார்.
அங்கு சுனிதா திடீரென தான் பாட்டிலில்
மறைத்து வைத்திருந்த மண் எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
பின்னர் வலி தாங்க முடியாமல் அலறியபடியே எரிந்த நிலையில் அங்கும் இங்கும்
ஓடினார். பின்பு மயக்கமடைந்தார். உடன் 108 ஆம்புலன்சை வரவழைத்து
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர். சப்-இன்ஸ்பெக்டர்
வேலாயுதத்துக்கும் கைகளில் காயம் ஏற்பட்டது. 2 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று பிற்பகலில் சுனிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல் நிலையத்திலேயே பெண் தீ குளித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment