Saturday, 13 April 2013

பதவிக்காக கட்டிய மனைவியை உயரதிகாரிகளுக்கு கட்டாய விருந்தாக்கிய கடற்படை துணைத்தளபதி மீது வழக்குப்பதிவு

பதவிக்காக கட்டிய மனைவியை உயரதிகாரிகளுக்கு கட்டாய விருந்தாக்கிய கடற்படை துணைத்தளபதி மீது வழக்குப்பதிவு.........!!

பதவி உயர்வு உள்ளிட்ட பணி ஆதாயத்துக்காக, கட்டிய மனைவியை உயரதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்துக்கொள்ள கட்டாயப்படுத்திய "தென்னக கடற்படை துணைத்தளபதி" மீது, அவரது இளம் மனைவி புகார் அளித்ததை தொடர்ந்து, கேரள போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

கொச்சியில் உள்ள "Southern Naval Command" (SNC) துணைத்தளபதியாக இருக்கும் (லெஃப்டிநென்ட்) அதிகாரி ஒருவர், ஒரிஸ்ஸாவை சேர்ந்த 26 வயது முதுநிலை பட்டதாரி பெண்ணை, கடந்த 2011ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் வைத்து திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் கூட பூர்த்தியாக நிலையில், தனது இளம் மனைவியை, பிற அதிகாரிகளுக்கு விருந்தாக்க துணிந்த இவர் மீது கடந்த 2 மாதங்களாக பல இடங்களிலும் புகாரளிக்க முயன்ற அவரது மனைவியின் புகார் மீது ஒரு வழியாக நேற்று முன்தினம் (10/04) கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, 04/04 அன்று எழுத்து மூலம் அளிக்கப்பட புகாரின் மீது ஆரம்ப கட்ட விசாரணையை மேற்கொண்ட கொச்சி துறைமுக காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் P.K.சாபு, புகாரில் முகாந்திரம் இருப்பதை உறுதி செய்தப்பின்னர், துணைத்தளபதி உள்ளிட்ட 10 கடற்படை அதிகாரிகள் மீது வழக்கை பதிவு செய்தார்.

பிறருடன் படுக்க சொல்லும் கணவனின் செக்ஸ் டார்ச்சரை பொறுக்க முடியாமல், 2 மாதமாக போராடிவந்த அந்த இளம் பெண், UPSC தேர்வின் மூலம் சிவில் சர்வீஸ் தொடர்பான வேலைக்கும் முயற்சி செய்துவந்தார்.

அது தொடர்பான நேர்காணலுக்கு டெல்லி சென்ற அவர், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, டெல்லி காவல் நிலையத்திலும், கணவருக்கு எதிராக புகார் அளித்தும் பயனில்லை.

ஒரு கட்டத்தில் கணவனின் கண்ணெதிரிலேயே - கணவனின் சம்மதத்துடன், அதிகாரிகள் அவரிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறும் அந்தப்பெண், வெளியே சொன்னால் கொலை செய்து கடலில் தூக்கி போட்டுவிடுவோம், என மிரட்டியதாக கூறுகிறார்.

இதற்கிடையில் "வான் அளாவிய அதிகாரம் படைத்த கடற்படை தளபதி மீது, உள்ளூர் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். போடமுடியாது" என்பன போன்ற ராணுவ நடைமுறை சட்டங்களை மேற்கோள் காட்டி வழக்குப்பதிவு செய்வதையும் தடுத்து வந்தனர், கடற்படைக் கயவர்கள்

அதை தொடர்ந்து, 3 நாட்களுக்கு முன், உள்ளூர் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அந்த அபலைப்பெண்ணின் "கண்ணீர் கதை" தொலைக்காட்சியில் ஒலிபரப்பானதை தொடந்தே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடற்படை துணைத்தளபதி உள்ளிட்ட 10 உயரதிகாரிகளின் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனைவிக்கு "மனநலம் சரியில்லை" என சொல்லப்பட்டதை முற்றிலும் நிராகரித்த கேரள மத்திய மண்டல "ஐ.ஜி" பத்மகுமார், அவர் நல்ல மனநிலையுடன் இருப்பதாகவும், தெளிவாக புகார் கொடுத்துள்ள அவர், அரசு வேலைக்காக சமீபத்தில் நேர்முகத் தேர்வுக்கு சென்று வந்திருப்பதையும் போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.

ராணுவம் கடற்படை உள்ளிட்ட படைகள், அன்றாடம் இதுபோன்ற ஆயிரக்கணக்கான பாலியல் பலாத்காரங்களை அரங்கேற்றி வந்தாலும் "சிறப்பு சட்டங்கள் வழங்கும் - சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி" வழக்குகளிலிருந்து எளிதில் தப்பித்து விடுகின்றனர்.

இந்த வழக்கிலும், கேரள ஹை கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அநேகமாக, இந்தக் காமக் கொடூரர்களுக்கு முன் ஜாமீன் கிடைத்து விடும் என்றே உயர் போலீஸ் அதிகாரிகள் கருதுகின்றனர்.

இது குறித்து மண்ட ஐ ஜி பத்மகுமாரிடம் கேட்ட போது, தற்போது முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், தன்னால் ஒன்றும் சொல்ல (செய்ய) முடியாது என்ற அவர், முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போது, வழக்கின் தன்மையை எடுத்து சொல்லி நீதிமன்றத்தில் போலீசின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும், என்று முடித்துக் கொண்டார்.

நன்றி : மறுப்பு

No comments:

Post a Comment