Wednesday, 3 July 2013

குடிபோதையில் நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற கிரிக்கெட் வீரர்

குடிபோதையில் நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற கிரிக்கெட் வீரர்!

லண்டன்: அதிக குடிபோதையில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் கதவை இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் திறக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்லூசியாவிலிருந்து கெட்விக் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இச்செயலை செய்த இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் கழிவறை என நினைத்து விமானத்தின் கதவைத் திறக்க முயன்றதாகக் குறித்த அந்த கிரிக்கெட் வீரர் கூறியுள்ளார். அவர் சுமார் 4 மணிநேரம் மதுவையே குடித்துக் கொண்டிருந்ததாக சக பயணி ஒருவர் தெரிவித்தார்.   எனினும் நடு வானில் விமானக் கதவுகளை இழுத்துத் திறப்பது சாத்தியமில்லை என்று விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நடு வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment