திருவனந்தபு-ரம் அருகே பரவூரில் கன்னியாஸ்திரிகள் படிக்கும் மடம் உள்ளது. இங்கு 9 மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். பரவூர் பகுதியைச் சேர்ந்த டெல்பி (வயது 24) மற்றும் அவரது உறவினர் ரேச்சல் (21) ஆகியோரும் இந்த மடத்தில் தங்கி படித்து வந்தனர். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு டெல்பி தனது அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சமையல் அறையில் இருந்த மண்எண்ணையை எடுத்துக் கொண்டு அங்கு வந்த ரேச்சல் மண்எண்ணையை டெல்பி மீது ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார்.
உடலில் தீப்பிடித்ததால் டெல்பி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு மற்ற மாணவிகள் திடுக்கிட்டு விழித்துக் கொண்டனர். அவர்கள் டெல்பி உடலில் பிடித்த தீயை அணைத்து அவரை காப்பாற்றினர்.
அதன் பிறகு அந்த மடத் தின் நிர்வாகிகள் டெல்பியை திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத் திரியில் அனுமதித்தனர். டெல்பி உடலில் 40 சதவீதம் தீயினால் பாதிக்கப்பட்டுள்ள தால் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்யப்பட் டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேச்சலை கைது செய் தனர். அவர்களுக்குள் எதற் காக தகராறு ஏற்பட்டது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார் கள்.
No comments:
Post a Comment