ரியாத் : பிரபல சாக்லெட் தயாரிப்பு நிறுவனத்தின் சாக்லெட்டுகளில், பன்றி இறைச்சி கலந்திருக்கலாம் என்ற சந்தேகம், சவுதி அரேபியா, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த, 'காட்பரிஸ்' சாக்லெட் நிறுவனத் தயாரிப்புகள், உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றவை. அந்த சாக்ெலட்டில், பன்றி கொழுப்பின் மூலக்கூறுகள் இருப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து, முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த மலேசிய நாட்டில், அந்த சாக்லெட் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அது போல், முஸ்லிம்கள் அதிகமுள்ள இந்தோனேசிய நாட்டிலும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில், இஸ்லாமிய சட்டங்கள் பின்பற்றப்படும் சவுதி அரேபியாவிலும், அந்த நிறுவன சாக்லெட்டுகளில், பன்றி கொழுப்பு கலந்திருக்கிறதா என, ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment