Sunday, 1 June 2014

மதரசாக்களை நவீனப்படுத்துங்கள்: ஆர்.எஸ்.எஸ். யோசனை

ஜெய்ப்பூர், ஜுன்.1-

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரும், முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் ஒருங்கிணைப்பாளருமான இந்திரேஷ் குமார், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மதரசாக்களை நவீனப்படுத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

புதிய அரசின் முன்னர் முன்மாதிரியாக முன்வைப்பதற்கு வசதியாக இங்குள்ள (ராஜஸ்தான்) சுமார் 20 மதரசாக்களை நவீனப்படுத்தும்படி முஸ்லிம் தலைவர்களிடம் கூறியுள்ளேன்.

மதரசாக்கள் என்பது மனிதநேயத்தை போதித்து, ஒற்றுமையை பரப்புவதாக அமைய வேண்டுமேயொழிய, பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கக் கூடாது. மக்களின் ஒரு கையில் மத நூலும், மற்றொரு கையில் ‘லேப்டாப்’பும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

மோடி தலைமையிலான புதிய அரசில் மதவாதத்தின் மூலம் அனைத்து சமுதாயத்தினரையும் ஒன்றாக இணைக்கும் நல்ல காலம் உருவாகும் என நம்பலாம். மதவாதத்திலேயே இரு வகைகள் உண்டு. ஒன்று, பிரிக்கும் மதவாதம். மற்றொன்று, இணைக்கும் மதவாதம்.

இதில், முதல் வகை மதவாதத்தை இந்த தேர்தலில் மக்கள் புறக்கணித்து விட்டனர். மக்களை பிளவுபடுத்தாமல், நெருக்கமாக்கும் இரண்டாவது வகை மதவாதத்துக்கு அவர்கள் வாக்களித்துள்ளனர். நாடு தழுவிய அளவில் சுமார் 10 சதவீதம் முஸ்லிம் வாக்குகள் பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ளன.

இதன் மூலம், நரேந்திர மோடியின் தலைமையின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment