அமெரிக்க பள்ளி ஒன்றில் மாணவிகள் கர்ப்பமாவதை தடுக்க அவர்களுக்கு காண்டம் வழங்கியுள்ளது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஓரகன் நகரில் உள்ள கெர்வியஸ் என்ற பள்ளியில் கடந்த ஆண்டு 6ஆம் வகுப்பு படித்த மாணவிகள் 12 பேர் கர்ப்பமாகி பின்னர் அவர்கள் தங்கள் கர்ப்பத்தை கலைக்க முயற்சித்துள்ளனர்.
இதுகுறித்து ஆலோசனை செய்த பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்கு இலவச காண்டம்களை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவை பள்ளியில் சூப்பர்இண்டெண்ட் ரிக் ஹென்சல் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்களை கொதிப்படைய செய்துள்ளது. மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்கவேண்டிய ஆசிரியர்களே அவர்களுக்கு காண்டம்களை வழங்குவது கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக இந்த முடிவை பள்ளி நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் பள்ளி மாணவிகளில் 7% பேர் சென்ற ஆண்டு கர்ப்பமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment