சீனாவில் பெண்மணி ஒருவர் மர்மநபர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சாண்டாங் மாகாணத்தில் உள்ள மெக்டொனால்ஸ் ஹொட்டலில் வைத்து அந்த பெண்மணியிடம், மதரீதியான கொள்கைகளை பரப்பும் 5 பேர் கொண்ட கும்பலானது தகராறு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த நபர்கள், அவரை தலையில் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளது.
மேலும் சுற்றி நின்ற மக்கள் எதுவும் செய்யமுடியாமல் தவித்துள்ளனர்.
இந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த நோட்டீஸ்களை பார்த்து இவர்கள் மதத்தை பற்றி பரப்புபவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது இவர்கள் அனைவரையும் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment