Monday, 2 June 2014

இங்கிலாந்தில் அட்டகாசம் செய்த மந்திரவாதி கைது




இந்தியாவை சேர்ந்த மந்திரவாதியான முஹம்மது அஷ்ரஃபி என்பவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மந்திரவாதி லிய்செஸ்டர் நகரில் நூதனமான விளம்பரங்களை துண்டு பிரசுரங்கள், வானொலி மற்றும் நாளேடுகளின் மூலம் வெளியிட்டு வந்தார்.
’கமல்-ஜி’ என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்ட இவர், தன்னை சாய்பாபாவின் பக்தர் என்றும், ஜாதக குறைபாடுகள், குடுமப உறவுகள், தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு தனது மந்திர சக்தியின் மூலம் நிவாரணம் செய்து வைப்பதாக தொடர்ந்து விளம்பரப்படுத்தி வந்தார்.
இதனை அறிந்த கொண்ட லிய்செஸ்டர் நகர பொலிஸார், இது தொடர்பாக பொதுமக்களை எச்சரித்து வந்தனர்.

இருப்பினும், இவரது விளம்பர மாயவலையில் மயங்கி, சிக்கிய ஒரு பெண்ணிடம் அவருக்கு சீட்டெழுப்பில் 6 கோடி பவுண்டுகள் விழுந்துள்ளதாக கூறி, போலி ஆவணங்களை காட்டி, அந்த பெண்ணிடம் இருந்து 60 ஆயிரம் பவுண்டுகளை மோசடியாகவும், மிரட்டியும் பறித்துக் கொண்டார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாடுக்கு அமைய குறித்த போலி மந்திரவாதியை பொலிஸார் கைது செய்தனர்.
உரிய ஆதாரங்களுடன் லிய்செஸ்டர் நீதிமன்றில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் மறு விசாரணையை இம்மாத இறுதிக்கு ஒத்திவைத்த நீதிபதி குற்றவாளியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
வெறும் 6 மாத வேலை விசாவில் லிய்செஸ்டர் நகருக்கு சென்ற முஹம்மது அஷ்ரஃபியிடம் வேறு யாராவது ஏமாந்துள்ளனரா? என்பது தொடர்பாகவும் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment