Wednesday, 3 July 2013

இஷ்ரத் என்கவுன்டர் போலியானது சி.பி.ஐ., குற்ற பத்திரிகை தாக்கல்


புதுடில்லி : "குஜராத்தில், 2004ல், மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் உட்பட நான்கு பேர், போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்' என, சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில், 2004ல் ஜூன், 15ம் தேதி, மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான், 19, பிரானேஷ் கோபிநாத் என்கிற ஜாவீத் ஷேக், அம்ஜத் அலி அக்பர் அலி ராணா, ஜீஷன் ஜோகர் ஆகிய நான்கு பேர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை, "என்கவுன்டர்' என, போலீசார் கூறினர்.ஆனால், பல்வேறு கட்சிகள், திட்டமிட்டு நடத்தப்பட்ட போலி என்கவுன்டர் என, குற்றம் சாட்டின.இதுகுறித்து விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டது. ஏற்கனவே ஐகோர்ட்டில் அளித்த உறுதிமொழியின்படி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், "இஷ்ரத் உட்பட நான்கு பேர், போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். இவர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு, என்கவுன்டர் என்ற பெயரில் கொல்லப்பட்டனர். என்கவுன்டர் நடந்த போது, ஆமதாபாத் குற்றப்பிரிவு இணை கமிஷனராக பணியாற்றிய பி.பி.பாண்டே, கொலை மற்றும் கிரிமினல் சதிக்கு காரணமாக இருந்துள்ளார்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டவர்களா என்பது குறித்து தகவல் இல்லை.

என்கவுன்டரை நடத்திய, ஏழு போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள், குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன. மேலும், குஜராத் போலீசாரும், மாநில புலனாய்வுப் பிரிவின் இணைப் பிரிவும் இணைந்து இந்த என்கவுன்டரை நடத்தியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளதுராஜிந்தர் குமார் உட்பட புலனாய்வு அதிகாரிகள் நான்கு பேர் மீது, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இது முடிந்ததும், துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது, இவர்கள் பெயர்கள் இடம் பெறும் என, சி.பி.ஐ., கோர்ட்டில் தெரிவித்துள்ளது.""இந்த வழக்கில் தொடர்புடைய சி.பி.ஐ.,யின் உளவுப்பிரிவு இணை இயக்குனர் ராஜிந்தர் குமார் பெயர், குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை; இதற்கு அரசியல் நெருக்கடியே காரணம்,'' என, வழக்கறிஞர் முகுல் சின்கா கூறினார். இவர், போலி என்கவுன்டரில் பலியான ஜாவீத் ஷேக் சார்பில் வாதாடியவர்.

No comments:

Post a Comment