மேட்டுப்பாளையம்: காரமடை அருகே சிறுமியிடம் "சில்மிஷம்' செய்தது தொடர்பாக, 65 வயது முதியவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த அவமானம் தாங்க முடியாத மகன், மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
காரமடையை அடுத்த மொள்ளேபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 65. இவர் கடந்த மாதம் ஒரு சிறுமியிடம் "சில்மிஷம்' செய்தது தொடர்பாக, துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரங்கசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரங்கசாமிக்கு மாணிக்கம் ,45, என்ற மகன் உள்ளார். இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். அதில், இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். தனது தந்தை தவறு செய்து சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்து, மாணிக்கம் மனநிலை பாதிக்கப்பட்டார். இச்சம்பவத்தால் மூன்றாவது மகளுக்கு திருமணம் நடக்குமா என்று, மனைவி சுந்தரியிடம் விவாதித்துள்ளார். இந்நிலையில்,அவமானம் தாங்க முடியாமல், வீட்டில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாணிக்கத்தின் மனைவி சுந்தரி காரமடை போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment