
பண்ருட்டி: மூதாட்டி கொலை வழக்கில், ஒருவரை, போலீசார் கைது செய்துள்ளனர். பண்ருட்டி அடுத்த, மேல்குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் நாராயணன். மாவட்ட காங்., முன்னாள் செயலர். இவரது மனைவி ஆண்டாள், 64. கடந்த மாதம், 26ம் தேதி, கரும்பு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது, கொலை செய்யப்பட்டார். உடல் நிர்வாணமாக கிடந்தது; நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் தெரிய வந்ததாவது: வயலில் இருந்த ஆண்டாளிடம், பாஸ்கரன், 26, என்பவர், நான்கு இளநீர் வாங்கி, மதுபானத்தை கலந்து குடித்துள்ளார். போதை தலைக்கேறியதும், மோட்டார் கொட்டகையில் குளித்துக் கொண்டிருந்த மூதாட்டியை, கற்பழித்து, கொலை செய்துள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரிந்தது. பாஸ்கரனை, போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment