சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் ஏற்பட்ட மோதலில் 6 பெண்கள் உள்ளிட்ட 14 உய்குர் முஸ்லிம்கள் மற்றும் இரு போலீஸார் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்துக்கு பயங்கரவாதிகள்தான் காரணம் என்று சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் முனிச்சை சேர்ந்த சர்வதேச உய்குர் காங்கிரஸ் அமைப்பு மற்றும் ப்ரி ஆசியா ரேடியோ ஆகியவை போலீஸார்தான் இந்த மோதலுக்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளன. இதில் ப்ரி ஆசியா ரேடியோ அமெரிக்க நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது.
சீனாவில் சிறுபான்மையினராக உள்ள உய்குர் முஸ்லிம்கள் வசிக்கும் ஷின்ஜி யாங் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது பெண் ஒருவரின் முகத் திரையை போலீஸ் அதிகாரி விலக்கிப் பார்த்துள்ளார். இதையடுத்து பெரும் மோதல் ஏற்பட்டது. இதில் 6 பெண்கள் உள்பட 14 உய்குர் முஸ்லிம்கள் கொல் லப்பட்டனர். இரு போலீஸாரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷின்ஜியாங் பகுதியில் பிரிவினை கோரி போராட்டம் நடந்து வருகிறது.
No comments:
Post a Comment