இதுதொடர்பாக அவரது வக்கீல் டானா சூஸ்மேன் கூறுகையில், ‘‘இந்தப்பிரச்சினையில் எனது கட்சிக்காரருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மீதான கவனத்தை, இப்போது தேவயானியின் கைது தொடர்பாக அதிகாரிகளும், ஊடகங்களும் திசை திருப்பிவிட்டன. இது கலக்கத்தையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது’’ என்றார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், ‘‘தேவயானி உரிய சம்பளத்தை என் கட்சிக்காரருக்கு தரவில்லை. அதுமட்டுமல்ல, அவர் எதிர்பார்த்ததைவிட அதிகளவில் வேலை வாங்கப்பட்டுள்ளார். இனியும் இதை சகித்துக்கொள்ள முடியாது என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்’’ என்றார்.
சங்கீதாவும், அவரது குடும்பத்தினரும் எங்கு உள்ளனர் என்பது குறித்து எதுவும் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். ‘‘இந்த தருணத்தில் எனது கட்சிக்காரர் வெளியே வரமாட்டார். ஊடகங்களுடன் பேசவும் மாட்டார்’’ என அவர் கூறினார்.
No comments:
Post a Comment