Sunday, 22 December 2013

"டிவி' பார்க்கும் போதுஅழுத குழந்தையைகொன்றவர் கைது


வாஷிங்டன்:கால்பந்தாட்ட போட்டியை, "டிவி'யில் பார்த்து கொண்டிருந்த போது, தொடர்ந்து அழுது கொண்டிருந்த, காதலியின் குழந்தையை கொன்ற வாலிபர், கைது செய்யப்பட்டு உள்ளார்.

அமெரிக்காவின், ஒக்லஹோமா நகரைச் சேர்ந்தவர், மர்கீஸ் வாக்கர், 22. கடந்த, 7ம் தேதி, இவர், டிவியில், கால்பந்தாட்ட போட்டியை ரசித்து பார்த்து கொண்டிருந்தார். இவருடைய காதலி, ஐந்து மாத குழந்தையை, வாக்கரிடம் விட்டு விட்டு, வெளியே சென்றிருந்தார்.

குழந்தை, திடீரென அழ ஆரம்பித்தது. வாக்கரால், குழந்தையை சமாதானப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வாக்கர், குழந்தையை தூக்கி வீசியுள்ளார். சுவரில் மோதிய குழந்தை, தலையில் பலத்த காயமடைந்த நிலையில் இறந்து விட்டது. இது தொடர்பாக, வாக்கரை கைது செய்த போலீசார், அவர் மீது, கொலை வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

No comments:

Post a Comment