கர்நாடக மாநிலம் மத்திய பகுதியில் உள்ல தேவனகிரியில் கடந்த சனிக்கிழமை 19 வயது இளம் பெண் ஒருவர் தனது கல்லூரியில் நடந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு இரவு 9.30 மணிக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பழக்கமான் பிர்த்வி என்ற இளைஞர் அவருடன் பேச்சு கொடுத்தபடி வந்துள்ளார். பிர்த்வி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தனது சகோதரியுடன் நடைபயிற்சி செய்யும் போது அந்த மாணவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
அவர்கள் பேசிகொண்டு வரும் போதே ஆள் இல்லாத பாபுஜி ஆடிட்டோரியம் அருகே வரும் போது ப்ரித்வி இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்து உள்ளார். அந்த பெண் அவருடன் சண்டை போட்டு உள்ளார். கராத்தே முறையில் பலமுறை அடித்து உள்ளார். இதில் கோபம் அடைந்த பிர்த்வி இளம் பெண்னை கீழே தள்ளி அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து முகத்தில் அடித்து உள்ளான்.இதனால் அந்த பெண்ணின் முகத்தின் இடது பாகத்தில் படுகாயம் ஏற்பட்டு உள்ளது. இதை பார்த்தது பயந்து போன பிர்த்வி தனது மோட்டர் சைக்கிளில் தப்பி விட்டான் .
படுகாயத்துடன் வீட்டிற்கு வந்த இளம் பெண் மருத்துவமனியில் சேர்க்கபட்டு உள்ளார் பெற்றோரின் புகாரின் பேரில் தேவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்ரவாளியை தேடி வருகின்றனர்.இளம் பெண்ணின் முகத்தில் உள்ள தாடை எழும்பு முழுவதுமாக சிதைந்து உள்ளது. அது சரிசெய்ய முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என கூறி உள்ளார். காமூகனிடம் இருந்து கற்பை காப்பாற்றி கொண்ட இளம் பெண் தனது முக அழகை இழந்து விட்டார்
No comments:
Post a Comment