சென்னை முத்தையால்பேட்டையில் ஏற்றுமதி நிறுவனத்தில் புகுந்த கும்பல் அங்கிருந்த முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளரை அரிவாளால் வெட்டி ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. பொதுமக்கள் விரட்டியதால் பணத்தை ரோட்டில் வீசிச் சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அரிவாளால் வெட்டி, பணம் கொள்ளைசென்னை மண்ணடி ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் திருப்பூர் எம்.ஏ.சத்தார் (வயது 66). இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளராக உள்ளார். அப்பகுதியில் துணிகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகன் லியாகத் அலியும்(40) நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். நேற்று மதியம் 1 மணியளவில் நிறுவனத்திற்கு அடையாளம் தெரியாத 3 நபர்கள் வந்தனர். அவர்கள் சத்தாரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரது தலையில் வெட்டினர். அப்போது தடுக்க வந்த லியாகத் அலியையும் சரமாரியாக வெட்டி விட்டு ரூ.10 லட்சத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர்.பணத்தை வீசி எறிந்து ஓட்டம் பக்கத்து கடையில் இருந்த காஜாசெரிப் என்பவர் கொள்ளை கும்பலை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் வெட்டிய கொள்ளையர்கள், அங்கிருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி ஓடியது. உடனே அங்கு இருந்த பொதுமக்கள் கொள்ளையர்களை துரத்திச் சென்றனர். மேலும், அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ரோந்து வாகனமும் கொள்ளையர்களை துரத்திச் சென்றது. பிராட்வே மூப்பனார் தெரு சந்திப்பில் வந்தபோது, கொள்ளையர்கள் பணத்தை ரோட்டில் போட்டு விட்டு தப்பிச் சென்றது. தகவல் அறிந்து முத்தையால்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த சத்தார், அவரது மகன் லியாகத் அலி மற்றும் காஜாசெரிப்பையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநில செயலாளர் தாக்கப்பட்டது குறித்து அறிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து முத்தையால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒருவரை பிடித்து விசாரணைஇதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கொள்ளையடித்த பணத்தை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றபோது, பொதுமக்களும் போலீசாரும் பின்னால் துரத்திச் சென்றனர். இதில் அச்சம் அடைந்த கொள்ளையர்கள் பணத்தை சாலையில் தூக்கிப்போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். சாலையில் சிதறிக் கிடந்த பணத்தை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பொதுமக்கள் அள்ளிச் சென்ற ரூ.8 லட்சத்து 64 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், கொள்ளையர்கள் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின்பேரில் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர் என்று தெரிவித்தார். பிராட்வே மண்ணடி பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tuesday, 31 December 2013
அரிவாளால் வெட்டி ரூ.10 லட்சம் கொள்ளை பொதுமக்கள் விரட்டியதால் பணத்தை ரோட்டில் வீசி விட்டு கொள்ளையர் ஓட்டம்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment