காரைக்கால் : திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், காரைக்கால் திருநள்ளாற்றை சேர்ந்த வாலிபர் மதனை காதலித்தார். மதனின் ஆசைவார்த்தையை நம்பி கடந்த 24ம் தேதி இரவு காரைக்கால் வந்தார். இளம்பெண்ணுக்கு துணையாக திருமணமாகி தனியாக வசிக்கும் அவரது தோழியும் காரைக்கால் வந்தார். காரைக்கால் பிரதான சாலையான பாரதியார் வீதியில் திருமணமான பெண்ணை காத்திருக்க வைத்துவிட்டு திருநள்ளாறுக்கு காதலர்கள் சென்றுவிட்டனர்.நீண்ட நேரம் தனியாக நின்ற பெண்ணை சில வாலிபர்கள் நோட்டமிட்டனர். அப்போது இரவாகி விட்டது. அந்த நேரத்தில் அந்த பெண்ணிடம் 3 வாலிபர்கள் தங்களை போலீசார் என்று அறிமுகம் செய்து கொண்டு விசாரித்தனர். இங்கு தனியாக நின்றால் ஆபத்து, காவல் நிலையத்திற்கு வா என்று கூறி லெமேர் வீதியில் உள்ள ஒரு வீட்டு மாடி அறைக்கு அந்த பெண்ணை அழைத்து சென்றனர்.
பின்னர் கூல்ட்ரிங்சில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். மாடியில் சத்தம் வந்ததை கவனித்த மேலும் 7 வாலிபர்கள் அங்கு சென்று பார்த்தனர். பின்னர் அங்கிருந்த 3 வாலிபர்களை அடித்து விரட்டினர். இதையடுத்து இங்கே வந்து மாட்டி கொண்டாயே என்று ஆறுதலாக பேசி, எங்களுடன் வா உன்னை பாதுகாப்பான இடத்தில் விடுகிறோம் என்று தருமபுரம் சுடுகாட்டு பகுதிக்கு கடத்தி சென்று அங்கு அனைவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். பிறகு அவர்களின் நண்பர்கள் சிலருக்கு தகவல் தெரிவித்து மேலும் 5 பேரை வரவழைத்தனர். அவர்கள் அந்த பெண்ணை திருநள்ளாறு பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து விட்டு அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
மறுநாள் காலையில் காதல் ஜோடிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு காரைக்கால் நகர போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தார். அப்போது பணியில் இருந்த எஸ்.ஐ வெங்கடாஜலபதி, ஏட்டு சபாபதி ஆகியோர் புகாரை பதிவு செய்யாமல் கட்ட பஞ்சாயத்து செய்தனர்.இதுபற்றி அறிந்ததும் காவல் நிலையத்துக்கு வந்து மாவட்ட எஸ்.எஸ்.பி மோனிகா பரத்வாஜ் விசாரணை நடத்தினார். இதையடுத்து புதுச்சேரி ஐஜி காமராஜ் சம்பந்தப்பட்ட 2 போலீசாரையும் தற்காலிக பணிநீக்கம் செய்தார். இதையடுத்து, கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய பெண்ணுக்கு முதலுதவி செய்து அவர் கூறிய இடம் மற்றும் அடையாளங்களை வைத்து ஒரு சிறுவன் உட்பட 11 பேரை நகர போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment