மும்பை: தன் பங்களாவை அழகு படுத்துவதற்காக, அரசு பணம், 27 லட்சத்தை செலவழித்ததாக, மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்., கட்சி தலைவருமான, அஜீத் பவார் மீது, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, அந்த, 27 லட்ச ரூபாயை, பொதுப்பணித் துறையிடம், அவர், திரும்ப கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரசின் பிரித்விராஜ் சவான், முதல்வராகவும், தேசியவாத காங்கிரசின், அஜீத் பவார், துணை முதல்வராகவும் பதவி வகிக்கின்றனர். இந்நிலையில், அனில் கல்காலி என்பவர், துணை முதல்வர் அஜீத் பவார் மற்றும் மாநில அமைச்சர்கள், செலவு செய்துள்ள அரசு பணம் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல் கேட்டிருந்தார். இதில், தெற்கு மும்பையில் உள்ள, தன் அதிகாரப்பூர்வ பங்களாவை அழகு படுத்துவதற்காக, அஜீத் பவார், 27 லட்ச ரூபாயை செலவு செய்துள்ளதும், இது, மாநில அரசின் பணம் என்றும், தெரியவந்தது. மேலும், முதல்வர் பிரித்விராஜ் சவான் உள்ளிட்ட, மகாராஷ்டிர மாநில அமைச்சர்கள், தங்கள் வீடுகளை மறு சீரமைப்பதற்கும், வெளிநாட்டு பயணங்களுக்கும், 14 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதும் தெரியவந்தது.
No comments:
Post a Comment