Wednesday, 18 December 2013

வகுப்புவாத மோதல் - மரணங்கள் பட்டியலில் உத்தர பிரதேசத்திற்கு முதலிடம்

வகுப்புவாத மோதல் - மரணங்கள் பட்டியலில் உத்தர பிரதேசத்திற்கு முதலிடம்
வகுப்புவாத சம்பவங்கள் மற்றும் அதன் விளைவுகளால் ஏற்பட்ட மரணங்கள் பட்டியலில் இந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வகுப்புவாத மோதல்கள் மற்றும் அதன் பாதிப்புகள் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று மத்திய உள்துறை இணை மந்திரி ஆர்.பி.என்.சிங் அளித்த எழுத்துப்பூர்வமான பதில் வருமாறு:-

நாடு முழுவதும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை நடந்த 725 வகுப்புவாத மோதல்களில் 143 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1978 பேர் காயம் அடைந்துள்ளனர்.

குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் வகுப்புவாத மோதல்கள் அதிக அளவில் நடந்துள்ளன. உத்தர பிரதேசத்தில் 250 மோதல் சம்பவங்களில் 95 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 313 பேர் காயம் அடைந்துள்ளனர். 

மத்திய பிரசேதத்தில் 70 மோதல் சம்பவங்களில் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். 225 பேர் காயம் அடைந்துள்ளனர். குஜராத் மற்றும் கர்நாடகாவில் தலா 61 சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் குஜராத்தில் 7 பேரும், கர்நாடகாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 

இந்த காலகட்டத்தில் மகாராஷ்டிராவில் நடந்த 64 சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 285 பேர் காயம் அடைந்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், அசாம், திரிபுரா, மேகலாயா, மணிப்பூர், மிசோம் மற்றும் நாகலாந்தில் வகுப்புவாத பிரச்சினைகளால் எந்த வன்முறைகளும் நடக்கவில்லை. 

இதுபோன்ற வன்முறை சம்பவங்களால் எந்த அளவுக்கு பொருள் இழப்பு மற்றும் எத்தனை பேர் வீடுகளை இழந்தனர் என்பது பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment