Saturday, 21 December 2013

சிறுவர்களுக்கு விஷம் கலந்த தயிரைக் கொடுத்த சீனப்பெண்

19 சிறுவர்களுக்கு விஷம் கலந்த தயிரைக் கொடுத்த சீனப்பெண்

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள லவ்தி நகரத்தின் ஆரம்பப் பள்ளி ஒன்றின் மாணவர்கள் கடந்த புதன்கிழமை அன்று தங்கள் வகுப்புகளை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது பள்ளிக்கு வெளியே நின்றுகொண்டிருந்த 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அவ்வழியே வந்த சிறுவர்களுக்கு தயிரைக் கொடுத்து சாப்பிட சொல்லியுள்ளார். அதனை வாங்கி சாப்பிட்ட 19 சிறுவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் சாப்பிட்டிருந்த தயிரில் விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதும் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது அவர் இந்தத் தயிரில் எலி விஷமும், பூச்சி மருந்தும் கலந்து கொடுத்துள்ளது தெரியவந்தது. அந்தப் பெண் மனநிலை சரியில்லாதவர் என்று சந்தேகிப்பதாகக் காவல்துறை செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment