Thursday, 19 December 2013

முன்னாள் மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட கணவன்



பிரான்சில் முன்னாள் மனைவியை பழிவாங்கும் நோக்கில் அவளின் கணவன் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சை சேர்ந்த நபர் ஒருவர், முன்னாள் மனைவியின் மீதுள்ள கோபத்தில் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சக ஊழியர்களுக்கும் நண்பர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து அப்பெண்ணின் முன்னாள் கணவனுக்கு 10 மாத சிறைதண்டனையும், 23,000 யூரோக்கள் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து இப்பெண்ணின் வழக்கறிஞர் கூறியதாவது, இவளின் முன்னாள் கணவனின் தண்டனை காலம் ஒரு வருடமாக நீட்டிக்கப்பட வேண்டும் மற்றும் இக்கொடூர செயலை கண்ட முன்னாள் மனைவி மனம் நோந்து, தற்கொலைக்கு முயன்று, இப்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தன் முன்னாள் மனைவியால் புறக்கணிக்கப்பட்ட வெறியில், அவளின் முன்னாள் கணவன் இவ்வாறு செய்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment