Friday, 27 December 2013

குடும்பத்தை காவு வாங்கிய 'குடி' : 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை


உச்சிப்புளி: இரண்டு குழந்தைகளுடன், ரயில் முன் பாய்ந்து, பெண் தற்கொலை செய்து கொண்டார். கணவரின் குடிப்பழக்கமே, இந்த முடிவுக்கு காரணம் என, போலீஸ் விசாரணையில் 
தெரியவந்துள்ளது. ராமநாதபுரம், உச்சிப்புளி அருகே சேர்வைக்காரன் ஊரணிப்பகுதியைச் சேர்ந்தவர் ரேகா, 25. அதே பகுதியைச் சேர்ந்த பழனியுடன், 4 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. வைஷ்ணவி, 3, வைசாலி, 2, ஆகிய பெண் குழந்தைகள் இருந்தனர். மது குடித்துவிட்டு, மனைவியிடம் தகராறு செய்து வந்தார் பழனி. அறிவுரை கூறியும் மாறவில்லை. மனமுடைந்த ரேகா, தாய் வீட்டுக்கு நேற்று காலை சென்றார். தாயுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில், இரு குழந்தைகளுடன், ரயில் முன் பாய்ந்தார்; மூவரும் உடல் சிதறி இறந்தனர். போலீசார், விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment