Thursday, 26 December 2013

வறுமை நீங்க சாமியார் பேச்சை கேட்டு ஆண் குழந்தையை பலி கொடுத்த இளம்பெண்,



கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், வறுமை நீங்க, இரட்டை குழந்தைகளில் ஒன்றை, தீயில் இட்டு பலி கொடுக்க வேண்டும் என, சாமியார் ஒருவர் கூறியதன்படி, ஐந்து மாத ஆண் குழந்தையை, தீயிலிட்டு, பலி கொடுத்த இளம்பெண், கைது செய்யப்பட்டார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, நாகலாந்தின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது, அசாம் மாநிலத்தின், சோனாரி கிராமம். இங்கு வசிக்கும் தன் சகோதரர்களைப் பார்க்க, ரஞ்சு தேவி, 30, என்ற பெண், தன் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன், சில நாட்களுக்கு முன் வந்திருந்தார்.
ரஞ்சு தேவிக்கு, 3 வயதில் பெண் குழந்தையும், ஐந்து மாதத்தில், இரட்டை ஆண் குழந்தைகளும் இருந்தன.
கடந்த சில நாட்களாக, சாமியார் ஒருவரை சந்தித்து வந்த தேவி, தன் வறுமை நீங்க என்ன செய்ய வேண்டும் என, கேட்டுள்ளார். அதற்கு, உன் இரட்டை குழந்தைகளில் ஒன்றை, பலியிட வேண்டும் என, அந்த சாமியார், யோசனை கூறியுள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவில், எரியும் தீயில், ஐந்து மாத ஆண் குழந்தையை போட்டு கொன்ற அந்தப் பெண், கருகிய குழந்தையின் உடலை, வீட்டுக்கு வெளிப்புறத்தில் புதைத்து விட்டார். இந்த தகவல் அறிந்த, அவளின் சகோதரர்கள், போலீசில் புகார் கொடுத்தனர். அதன்படி ரஞ்சு தேவியை, போலீசார் கைது செய்து, குழந்தையின் உடலையும் கைப்பற்றி உள்ளனர்.

No comments:

Post a Comment