Tuesday, 24 December 2013

செக்ஸ் தொந்தரவு கொடுத்த பயிற்சியாளரை பிடிக்க போலீசுக்கு உதவிய திருடன்



மாட்ரிட்: ஸ்பெயினில், சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, கால்பந்தாட்ட பயிற்சியாளரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான, ஸ்பெயினில், கால்பந்தாட்ட பயிற்சியாளரின் வீட்டில் புகுந்த ஒரு திருடன், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா, மற்றும் அந்த வீட்டில் இருந்த சில வீடியோ "சிடி'க்களையும் திருடிச் சென்றான். தன் வீட்டுக்கு சென்ற திருடன், பயிற்சியாளரின் வீட்டில் திருடியவனின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய வீடியோ காட்சிகளை பார்த்தான். அதில், சிறுவர்கள் பலரை, பயிற்சியாளர், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய காட்சிகள் பதிவாகியிருந்தன. இதைக் கண்ட திருடன், அதிர்ச்சி அடைந்தான். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் மற்றும் பயிற்சியாளரின் வீட்டிலிருந்து திருடி வந்த ஆபாச பட "சிடி'க்களை ஒரு கவரில் பார்சல் செய்தான். அந்த பார்சலை, மக்கள் கூட்டம் அதிகம் உள்ள ஒரு சாலையில் வீசினான். அதன் பின், போலீசுக்கு போன் செய்து, குறிப்பிட்ட பார்சலை பிரித்துப் பார்க்குமாறும், அதில் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டு முகவரி இருப்பதாகவும் தெரிவித்தான். ""நான் ஒரு திருடன் என்பதால், போலீசை நேரில் சந்தித்து புகார் தர இயலாது,'' என, கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்தான். திருடன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற போலீசார், பார்சலை கைப்பற்றி, அதில் பதிவாகியிருந்த காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, பயிற்சியாளரின் வீட்டிற்குச் சென்று அவரை கைது செய்தனர். 64 வயதான கால்பந்தாட்ட பயிற்சியாளர், பல சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பயிற்சி பெற வரும் சிறுவர்களுக்கு, ஆபாச பட வீடியோக்களை காண்பித்து, அவர்களுடன் உல்லாசமாக இருந்ததை, பயிற்சியாளர் ஒப்புக்கொண்டார். பயிற்சியாளரை கைது செய்ய உதவிய பலே திருடனை, போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment