Friday, 27 December 2013

குஜராத் கலவரம் குறித்து நிலிகண்ணிர் வடிக்கும் மோடி


ஆமதாபாத்: குஜராத் கலவரம் நடந்த போது தான் பெரும் மன வேதனையுற்றதாகவும், அதை வார்த்தைளால் தெரிவிக்க முடியாது என்றும், மோடி தனது பிளாக் மூலம் கூறியுள்ளார்.

குஜராத் கலவரம் குறித்து இதுவரை எவ்வித அதிகபட்ச கருத்தும் கூறாமல் இருந்து வந்த பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி இன்று தனது பிளாக்கில் இது தொடர்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் . 

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்பும், வருத்தமும் அதிகமாக இருந்த நேரத்தில், கடந்த 2002 ல் குஜராத் கலவரம் என்னை அதிகம் பாதித்தது. அந்த கலவரம் என்னை கடும் அதிர்ச்சியை அளித்து, நிலைகுலைய செய்தது. தனக்கு நெருங்கிய பாசமிக்கவர்களை இழப்பதை யாராலும் ஏற்று கொள்ள முடியாது, எனது அன்புக்குரியவர்களை இழந்தேன், ஒன்றும் அறியாத அப்பாவிகள் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் நிற்கதியாக நின்றனர். இந்த கலவரம் நடந்த போது எனது மனம் வேதனை அடைந்தது. எனது உள்ளம் மிக துயரப்பட்டது, பெரும் கவலையுற்றேன். எத்தனை வார்த்தைகள் கூறினாலும், இந்த உணர்வை தெரிவிக்க முடியாது. 

நேற்று வெளியான தீர்ப்பு, நான் சமநிலையில் இருப்பவன் என்பதை உணர்த்தி உள்ளது. இதனால் எனது மனம் அமைதி பெற்றது. இது சகோதரத்துவத்துக்கும், குஜராத் மக்களுக்கும் கிடைத்த வெற்றி. 12 ஆண்டுகள் எரிந்த தீ அணைக்கப்பட்டு விட்டது. நான் சாவுக்கு காரணமான குற்றவாளி என்று விமர்சிக்கப்பட்டேன். அதில் இருந்து விடுபட்டுள்ளேன். ஒரு நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு ஒருமைப்பாடு மட்டுமே அடித்தளமாக இருக்கும் என்பதை உணர்ந்து தான், எனது ஒவ்வொரு செயல்பாடுகளும் அமைகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment