சீன நாடாளுமன்றத்தில் ஒரு தம்பதி 2 குழந்தை பெற்றுக் கொள்வதற்கான மசோதா திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
சீனாவில் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெறும் திட்டம் 1979ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
இருப்பினும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் காரணமாக இளைஞர்களின் மனித ஆற்றல் வெகுவாகக் குறையத் தொடங்கியுள்ளது. முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தக் காரணங்களைக் கருத்தில் கொண்டு "ஒரு குழந்தை' திட்டத்தை வாபஸ் பெற சீன அரசு முடிவு செய்தது. இதையடுத்து, ஒரு தம்பதி இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கான மசோதா சீன நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment