அப்போது கடும் குளிரால் பாதிக்கப்பட்டு தங்கள் குழந்தைகளில் பலர் இறந்துவிட்டதாக நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்கள் தெரிவித்தனர். இது குறித்து உ.பி அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்த ராகுல், அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் இவ்விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாடு முழுவதும் இருந்து பல்வேறு அரசியல் கட்சியினர் உ.பி அரசுக்கு கண்டனம் தெரிவித்து வரும் வேளையில் நேற்று ஷாம்லி மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமை பார்வையிட்ட அம்மாநில அரசின் உயரதிகாரிகள், அங்குள்ள மக்களிடம் தங்கள் வீடுகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். மேலும் முகாமில் உள்ள அதிகாரிகளிடமும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அங்கு தங்கியுள்ள மக்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு முகாமை மூடுமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் மேலும் ஒரு திருப்பமாக இன்று முசாபர் நகர் முகாமுக்கு வந்த உயரதிகாரிகள் குழு அங்குள்ள மக்களையும் வீடுகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளன. முகாம் அதிகாரிகளையும் அம்முகாமை மூடிவிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதாக அங்கிருந்து வரும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன.
அம்முகாமில் தங்கியுள்ள 80 குடும்ப உறுப்பினர்களை அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் வகையில் 6 டிரக் வண்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment