சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பள்ளி மாணவி ஒருவரை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த போலீஸார் 5 பேரில் இருவர் கைது செயயப்பட்டனர். 17 வயதான பள்ளி மாணவியே பாதிக்கப்பட்டவர். 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பிரச்சனை தொடர்பாக சண்டிகர் போலீசில் புகார் அளித்த மாணவியை போலீஸார் காவல் நிலையம் அழைத்து சென்று அக்ஷய், சுனில், ஜத்தர் உட்பட 5 பேர் மாணவியை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் பொய் வழக்கு போடுவோம் என்று மிரட்டி தொடர்ந்த அவரை பலாத்காரம் செய்து வந்தனர். கொடுமையை தாங்க முடியாத மாணவி உள்ளூர் தலைவரின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 போலீஸார் அடையாளம் காணப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர். மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து சென்ற போது அவர்களை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள் போலீஸாரை கண்டித்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயற்சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாணவி மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment