Tuesday, 24 December 2013

"பேஸ்புக்' கில் இளம்பெண்ணை மனைவியாக சித்தரித்தவர் கைது




திருப்பூர்: திருமணம் நிச்சயமான இளம்பெண்ணை, "பேஸ்புக்'கில், மனைவியாக சித்தரித்த, எம்.பி.ஏ., பட்டதாரியை, போலீசார் கைது செய்தனர். திருப்பூர், போயம்பாளையத்தைச் சேர்ந்தவர், யோகேஸ்வரன், 25; எம்.பி.ஏ., பட்டதாரி; தனியார் மொபைல் நிறுவனத்தில், வேலை செய்து வந்தார். குப்பாண்டம் பாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, ஒருதலையாக காதலித்துள்ளார். அந்த பெண்ணுக்கு, திருமணம் நிச்சயமானது; ஆத்திரமடைந்த, யோகேஸ்வரன், பேஸ்புக்கில், பெண்ணை, தன் மனைவியாக சித்தரித்து, தகவல் வெளியிட்டார். இதுகுறித்து, வீரபாண்டி போலீசார், வழக்குப் பதிந்து, பெண் வன் கொடுமை தடுப்பு சட்டத்தில், வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment