Tuesday, 24 December 2013

191 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் துபாயில் பறிமுதல்

191 கோடி மதிப்பிலான கிளர்ச்சியூட்டும் போதை மாத்திரைகள் துபாயில் பறிமுதல்
துபாயில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க 'நைன் பால்' என்ற நடவடிக்கையை போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம் ஆம்பெட்டாமைன் உள்ளிட்ட 46 லட்சம் கேப்டாகான் என்ற போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதன் சர்வதேச மதிப்பு 191 கோடியாகும். இதுவே துபாயின் மிகப்பெரிய போதை மாத்திரைகள் பறிமுதல் என்று கூறப்படுகிறது. இந்த கடத்தலில் ஈடுபட்ட அரபு நாடுகளை சேர்ந்த 5 பேரில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மத்திய கிழக்கு நாடுகளில் இதுபோன்று கிளர்ச்சியூட்டும் போதை மாத்திரைகள் கள்ள சந்தையில் மிகப்பிரபலம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment