உத்தரப் பிரதேச மாநிலம் அத்சிந்தாவ்லி கிராமத்தில் பெண்ணை கேலி செய்த விவகாரம் தொடர்பாக இரு பிரிவினரிடையே செவ்வாய்க்கிழமை இரவு மோதல் ஏற்பட்டது.
மோதலின்போது துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்த தகவல்கள் இல்லை.
இதனால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகவும், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஷாம்லி மாவட்டம் லத்தீஃப்கர் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து செயலாளர் கே.கே. ஷர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment