Wednesday, 25 December 2013

தர்கா உண்டியல்களை உடைத்து திருடியவன் சிக்கியும் திருடனை கோட்டை விட்ட போலீசார்


தூத்துக்குடி: பள்ளி வாசல், தர்கா உண்டியல்களை உடைத்து திருடியவர், சிக்கியும் ரோந்து சென்ற போலீசார் திருடனை, கோட்டை விட்டனர். ஸ்ரீவைகுண்டம் பஜார் பகுதியில் பெரியபள்ளி வாசலும், அத அருகே தர்காவும் உள்ளது. இங்கிருந்த உண்டியல்கள் உடைக்கப்பட்டு, பணம் திருடப்பட்டிருந்தது. நேற்று காலை தொழுகைக்கு வந்தவர்கள், உண்டியல் உடைந்து கிடைப்பதை பார்த்து, பள்ளி வாசல் நிர்வாகி ஜாபரிடம் தெரிவித்தனர். அவர் ஸ்ரீவைகுண்டம் போலீசில் புகார் செய்தார். பெரிய பள்ளிவாசல் பகுதியில் அதிகாலை 5:00 மணிக்கு எஸ்.ஐ.,க்கள் சுப்புலட்சுமி, பால்துரை ரோந்து பணியில் இருந்தனர். அவ்வழியே ஜீன்ஸ் பேன்ட், சட்டை அணிந்து வந்த டிப்டாப் வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அந்த வாலிபர் சட்டை பையில் சில்லரை காசுகள் அதிகம் வைத்திருந்தார். போலீசார் கேட்டதற்கு, "சில்லரையை மாற்றுவதற்காக கொண்டு செல்வதாக கூறி விட்டு சென்றார். பெரிய பள்ளி வாசல் உண்டியல் திருட்டு குறித்து, புகார் வந்த பின்பு தான், போலீசாருக்கு சில்லரை வைத்திருந்தவர் உண்டியல் திருடன் என்பதும், அவரை பிடித்து விசாரித்து, தப்ப விட்டதும் தெரியவந்தது. அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment