வகங்கை: சிவகங்கையில், எஸ்.எம்.எஸ்., தகவலால் 8ம் வகுப்பு மாணவி ஒருவர்
தற்கொலை செய்து கொண்டார். "மொபைல் போனில் டார்ச்சர்' கொடுத்த புதுக்கோட்டை வாலிபர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை அரசனேரி கீழமேட்டைச் சேர்ந்த மாணவி,13. சிவகங்கை தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். டிச.17ல் திடீரென வீட்டில் தீக்குளித்தார். மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி டிச.22ல் உயிரிழந்தார். போலீஸ் விசாரணையில், ராஜா என்பவர் அடிக்கடி மொபைல் போனில் பேசி, தொந்தரவு செய்ததால் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்படையினர், ராஜா போன் நம்பரை வைத்து, விசாரித்தபோது, அவர் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகேயுள்ள வெள்ளாளவயலைச் சேர்ந்த பச்சமுத்து, 25, என்ற ராஜா என, தெரிய வந்தது. குவாரியில் வேலை பார்க்கும் இவர், மாணவியின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக கூறி, அவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், ""கடந்த 3 மாதத்திற்கு முன், பச்சமுத்துவின் போனுக்கு "ஹலோ' என்ற எஸ்.எம்.எஸ்., சென்றிருக்கிறது. யார்? என, அவர் கேட்டபோது, மாணவி ஒருவர் என்றும், 8ம் வகுப்பு படிப்பதாக கூறியுள்ளார். மாணவியை நம்ப வைப்பதற்காக, பச்சமுத்துவும் சிவகங்கையில், 10ம் வகுப்பு படிப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருவரும் அடிக்கடி பேசியுள்ளனர். கடந்த வாரம் அந்த மாணவியிடம் பேசிய பச்சமுத்து, தன்னுடன் வருமாறும்,வரவில்லை என்றால்,கடத்தி விடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து அந்த மாணவி,பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். மாணவி மரண வாக்குமூலத்தால் பச்சமுத்துவை கண்டுபிடித்து கைது செய்தோம்,'' என்றனர். பெற்றோர் உஷார்: விளையாட்டாக போன் உரையாடல் பல்வேறு விபரீதங்களை ஏற்
படுத்தி விட்டது. எஸ்.எம்.எஸ்., தகவலால் மாணவி ஒருவரின் உயிர் பறிபோனது. படிக்கும் மாணவர்கள் கையில், மொபைல் போன் கொடுப்பதை பெற்றோர் தவிர்ப்பதே நல்லது.
No comments:
Post a Comment