போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே, பஸ்சில், இளம்பெண்ணுக்கு, "பிளையிங் கிஸ்' கொடுத்த, போதை போலீஸ்காரருக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். தர்மபுரி மாவட்ட தனிப்பிரிவு போலீசில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர், ராஜேந்திரன். இவரது மகன் கணேஷ்குமார், 23. இவர், போச்சம்பள்ளி, களர்பதி அருகே,ஏழாவது பட்டாலியனில், இரண்டு ஆண்டுகளாக, போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று மாலை, பணிக்கு செல்ல, தர்மபுரியில் இருந்து, திருப்பத்தூர் செல்லும் தனியார் பஸ்சில், குடிபோதையில் ஏறியுள்ளார். பஸ்சில் சீட் இருந்தும், கணேஷ்குமார் படியில் நின்று பயணம் செய்துள்ளார். இருமத்தூருக்கு பஸ் வந்த போது, சந்தூரை சேர்ந்த, 17 வயது பெண் உட்பட, 10 க்கும் மேற்பட்டோர் பஸ்சில் ஏறியுள்ளனர். போச்சம்பள்ளி நோக்கி, பஸ் சென்று கொண்டிருந்த போது, படியில் நின்ற கணேஷ்குமார், பஸ்சில் அமர்ந்திருந்த இளம்பெண்ணுக்கு, அடிக்கடி, பிளையிங் கிஸ் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த, பெண்ணின் உறவினர்கள் மற்றும் பஸ்சில் வந்த பயணிகள், கணேஷ்குமாருக்கு தர்மஅடி கொடுத்து, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். புகாரையடுத்து, போலீசார் விசாரிக்கின்றனர்
No comments:
Post a Comment