Tuesday, 31 December 2013

புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக கேலி, கிண்டல் செய்தால் காப்பு

 

சென்னை: குடிபோதையில் வாகனம் ஓட்டினாலும், புத்தாண்டு கொண்டாடம் என்ற பெயரில், பெண்களை கேலி, கிண்டல் செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்து உள்ளனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர், அதிவேகமாக செல்வோர், இரண்டு பேருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக, பெண்களை கேலி, கிண்டல் செய்தல், கையைப் பிடித்து இழுத்தல் கூடாது; மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது. இழிவான முறையில் கேலி, கிண்டல் செய்வோர், வர்ண பொடிகள் தூவுதல், வர்ணம் கலந்த தண்ணீர் அடித்தல் போன்றவற்றை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். கடலில் விளையாடுதல், படகுகளில் ஏறி கடலுக்குள் செல்வது கூடாது.
இருசக்கர வாகனங்களில், ரேஸ்களில் ஈடுபடுவதை கண்காணிக்க, தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இவை, போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment