மதுரை:முதல் முயற்சியிலேயே, டில்லி சட்டசபை தேர்தலில், அதிக தொகுதிகளை கைப்பற்றிய, "ஆம் ஆத்மி' கட்சியின் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், மதுரையில் பிறந்ததாக, மாநகராட்சி சார்பில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மதுரை கலெக்டரிடம், வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர்.
சில மாதங்களுக்கு முன், தமிழக அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., அண்ணாதுரை இறந்து விட்டதாகக் கூறி, மதுரை மாநகராட்சி சார்பில், இறப்புச் சான்று வழங்கி, அதிர்வலையை ஏற்படுத்தினர்; சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது, மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது; சிலர் கைது செய்யப்பட்டனர்.அந்த பரபரப்பு அடங்குவதற்குள், "ஆம் ஆத்மி' கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுரையில் பிறந்ததாக, பிறப்புச் சான்றிதழ் வெளியாகியுள்ளது. "அவர் மதுரையில் பிறந்தார்' என, மாநகராட்சி வழங்கியதாக, பிறப்புச் சான்றிதழுடன், வழக்கறிஞர்கள் நான்கு பேர், கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
வழக்கறிஞர் முத்துக்குமார் கூறியதாவது:மதுரை கோர்ட் வளாக, வழக்கறிஞர்கள் சேம்பரில் உள்ள, மோகன்தாஸ் அறையில், டிச., 19ல், இச்சான்றிதழ் கிடந்தது. மதுரை டி.ஆர்.ஓ.,விடம் புகார் செய்துள்ளோம்; அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தகவல் அனுப்பியுள்ளோம். "மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது தான்' என, அலுவலர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது, அரசு, நடவடிக்கை எடுக்காவிடில், சி.பி.ஐ., அல்லது சி.பி.சி.ஐ.டி., விசாரணை கோரி, ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் பெயரில், மதுரை மாநகராட்சி வழங்கியதாக வெளியாகியுள்ள பிறப்புச் சான்றிதழில், "நிரந்தர முகவரி - ராம்வர்மா நகர், டில்லி, குழந்தை பிறப்பின் போது, பெற்றோரின் முகவரி 27, கற்பக நகர், கே.புதூர், மதுரை' என, குறிப்பிடப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு பதிவாளர், மதுரை மாநகராட்சி, தலைமை அலுவலகம் என, முத்திரையிடப்பட்டுள்ளது; ஆனால், சான்றிதழ் வழங்கிய அதிகாரியின் கையெழுத்து இல்லை. எனவே, இது உண்மையிலேயே, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயருக்கு வழங்கப்பட்டதா அல்லது அதே பெயரில் உள்ள வேறு நபருக்கு வழங்கப்பட்டதா என்பது, விசாரணையில் தெரிய வரும்.
No comments:
Post a Comment