Friday, 27 December 2013

தினமும் திட்டியதால் கணவரை கழுத்தறுத்து கொலை செய்த மனைவி



விருதுநகர்: விருதுநகரில், மகளின் காதல் திருமணத்திற்கு,மனைவி தான் காரணம் என கூறி, தினமும் திட்டயதால், ஆத்திரமடைந்த மனைவி, மகன்களுடன் சேர்ந்து, கணவரை, கழுத்தறுத்து கொலை செய்தார். அவர்களை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் முத்தால் நகர் சத்திய சாய் நகரை சேர்ந்தவர் கிருஷ்ண சாமி, 49. (ஓட்டல் தொழிலாளி),இவருக்கு, மனைவி பாப்பா, 45,மகன்கள் முனியாண்டி, 26, முனீஸ்வரன், 22, மகள் முனீஸ்வரி, 19, ஆகியோர் உள்ளனர். முனிஸ்வரனுக்கு, திருமணம் முடிந்து விட்டது. முனீஸ்வரி, கல்லூரியில் படிக்கும் போது, உறவினரான பாலமுருகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு,தந்தை கிருஷ்ண சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில்,மகள் திருமணத்திற்கு, மனைவி பாப்பா தான் காரணம் என கூறி, கிருஷ்ணசாமி, தினமும் திட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ,கிருஷ்ணசாமி திட்டுவதை கண்ட பாப்பா , அத்திரமுற்றார். அப்போது ஏற்பட்ட தகராறில், பாப்பா, மகன்கள் முனியாண்டி, 26,முனிஸ்வரன், 22,ஆகியோர், தாக்கியதில், கிருஷ்ண சாமி கீழே விழுந்தார். தலையில் காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, வீட்டிலிருந்த அரிவாளால், கிருஷ்ணசாமி கழுத்தை, மனைவி, மகன்கள் அறுத்தனர். கிருஷ்ணசாமி பலியானார். 
இதை தொடர்ந்து,கணவரை கொலை செய்த மனைவி, மகன்களை, பாண்டியன் நகர் போலீசார் கைது செய்து, விருதுநகர் ஜெயிலில் அடைத்தனர்.

No comments:

Post a Comment