போபால்: முசாபர் நகர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் குறித்து, சமாஜ்வாதி கட்சி தலைவர், முலாயம் சிங் யாதவ் விமர்சித்ததற்கு, முஸ்லிம் அமைப்பு, கண்டனம் தெரிவித்து உள்ளது.
உ.பி., மாநிலத்தில், முதல்வர், அகிலேஷ் தலைமையில், சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, முசாபர் நகர் மாவட்டத்தில், சில மாதங்களுக்கு முன், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில், 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; ஏராளமான வீடுகள் தீ வைக்கப்பட்டன.
வீடுகளை இழந்தோர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கலவரம் ஓய்ந்து, இப்போது இயல்பு நிலை திரும்பினாலும், முகாம்களில் இருந்து, பலர், இன்னும், தங்கள் வீடுகளுக்கு திரும்பவில்லை.
இதுகுறித்து, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், முகாம்களில் இப்போது தங்கியுள்ளவர்கள்,
கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள இல்லை. காங்., பா.ஜ., ஆகிய கட்சிகளின் ஆதரவாளர்கள். சமாஜ்வாதி கட்சியின், இமேஜை சீர்குலைக்கும் நோக்கத்துடன், அவர்கள் முகாம்களில் தங்கியுள்ளனர் என்றார்.
அவரின் பேச்சுக்கு, அனைத்து தரப்பிலிருந்தும், கடும் எதிர்ப்பு எழுந்தது. மத்திய பிரதேசத்தில் செயல்படும், மஜ்லிஸ் தமிர் இ மில்லத் என்ற முஸ்லிம் அமைப்பு, முலாயம் சிங் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினரின் மனதையும் புண்படுத்தியுள்ளது. முலாயம் சிங், தன் மனதில் என்ன நினைக்கிறார் என, இதன்மூலம தெரிந்து விட்டது என,
தெரிவித்து உள்ளது
No comments:
Post a Comment