மகாராஷ்டிர மாநிலம் ஜவார் தாலுகாவிலுள்ள கக்டியாச்சிவாடி கிராமத்தை சேர்ந்த 28 வயது இளைஞர் சாந்தாராம். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். குடிப்பதற்காக பணம் கேட்டு எப்பொழுதும் தனது தாயை தொந்தரவு செய்து கொண்டேயிருப்பார்.
இந்நிலையில் நேற்றும் இவர் தனது தாய் சக்ருபாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார். ஆனால் அவரது தாய் பணமில்லை என்று கூறியதையடுத்து ஆத்திரமடைந்த சாந்தாராம் தாய் என்று கூட பாராமல் அவரை பல முறை எட்டி உதைத்தார். அதோடு நிற்காமல் அருகில் கிடந்த கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கினார்.
இத்தாக்குதலால் சம்பவ இடத்திலேயே சக்ருபாய மரணமடைந்தார். உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிய சாந்தாராம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்
No comments:
Post a Comment