ராமநாதபுரம்: ராமநாதபுரம் கீழக்கரை அருகே, சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு, அக்காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்ட, பள்ளிவாசல் நிர்வாகி மீது, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. கீழக்கரை, நத்தம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த பெண் ஒருவர், கூடுதல் எஸ்.பி., வெள்ளத்துரையிடம் கொடுத்த புகார் மனு: கணவர், வெளிநாட்டில் வேலை செய்கிறார். எனது 8 வயது மகன், நத்தத்தில் உள்ள "சுனைத் பள்ளிவாசலுக்கு' தொழுகைக்கு செல்வான். சில மாதங்களுக்கு முன், தெருவில் விளையாடிய என் மகனை, பள்ளிவாசல் நிர்வாக பொறுப்பில் உள்ள சித்திக், 55, மிரட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு, அவனை துன்புறுத்தி, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார். அக்காட்சிகளை மொபைல் போனில் பதிவு செய்து, இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தொழுகைக்கு வந்த சிறுவர், சிறுமிகளை அவர் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர், இதுவரை புகார் செய்யவில்லை.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, ""கொல்லாமல் விடமாட்டேன்,'' என, தொடர்ந்து மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடியோ காட்சியின் "சிடி' யை, இத்துடன் இணைத்துள்ளேன், என அதில் கூறியுள்ளார். கூடுதல் எஸ்.பி., கூறுகையில், ""சித்திக்கை கைது செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார். இன்ஸ்பெக்டர் கணேசனிடம் கேட்டபோது, ""தலைமறைவான,
சித்திக்கை தேடி வருகிறோம்,'' என்றா
No comments:
Post a Comment