புதுடில்லி:வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவை நிறைவேற்றுவதில், மத்திய அரசு முழு ஆர்வம் காட்டவில்லை' என, முஸ்லிம் அமைப்புகள் குற்றம்சாட்டின.
நடந்து முடிந்த பார்லிமென்ட்டின் குளிர்கால கூட்டத்தொடரில், வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா நிறைவேற்றப்படும் என, மத்திய அரசு அறிவித்து இருந்தது. ஆனால், பார்லிமென்ட்டில் தொடர்ந்து அமளி நிலவியதால், இந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த மசோதாவிற்கு, பா.ஜ., உட்பட சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே வெளியிட்ட அறிவிப்பல், "பார்லிமென்ட்டின் அடுத்த கூட்டத்தொடரில் நிச்சயம் தாக்கல் செய்யப்படும்' என கூறினார். இந்த மசோதாவின் சில அம்சங்களை நீக்கி, மத்திய அமைச்சரவை பின்பு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், முஸ்லிம் அமைப்புகளின் முன்னணியில் உள்ள சில அமைப்புகள், வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா நிறைவேற்றப்படாததற்கு, மத்திய அரசு முழு ஆர்வமோ, தீவிர காட்டவில்லை என குறை கூறின. அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் இ முஷாவரத்தின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் கூறுகையில்,""மத்திய அரசு லோக்பால் மசோதாவை நிறைவேறுவதற்கு காட்டிய ஆர்வத்தை, வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா'வுக்கு காட்டவில்லை,'' என்றார்.
அகில இந்திய முஸ்லிம் தனி சட்ட வாரிய உறுப்பினரும், திரிணமுல் காங்., தலைவருமான, சுல்தான் அகமது கூறுகையில்,""இந்த மசோதாவை, கொண்டுவருவதில், மத்திய அரசு தீவிரம் காட்டியிருந்தால், அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்த்து இருக்கலாம். ஆனால், மத்திய அரசு எவ்வித ஆர்வமும் காட்டவில்லை,'' என்றார்.
No comments:
Post a Comment