புதுடில்லி: ஐ.நா., பணிகளுக்காக, இந்திய ராணுவ வீரர்களை தேர்வு செய்தபோது, சரியான நடவடிக்கைகளை பின்பற்றாத மத்திய அரசின் செயல்பாட்டிற்கு, டில்லி ஐகோர்ட் கண்டனம் தெரிவித்து உள்ளது.
ஐ.நா., பணிகளுக்காக, இந்திய ராணுவ வீரர்கள் வெளிநாடுகளில் பணியமர்த்தப்படுவது வழக்கம். இதற்காக, 2001ம் ஆண்டு, தகுதியுடைய வீரர்களுக்கு பதிலாக, வேறு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மத்திய அரசின் இந்த செயல்பாட்டிற்கு எதிராக, நான்கு ராணுவ வீரர்கள், டில்லி ஐகோர்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், அனைத்து தகுதிகளும் உடைய வீரர்கள் தேர்வு செய்யப்படாததன் மூலம், மத்திய அரசு விதிமுறைகளைப் பின்பற்றாதது தெரியவந்துள்ளதாக கூறியது. மத்திய அரசின் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ள கோர்ட், இனி வரும் காலங்களில் விதிமுறைகளைப் பின்பற்றியே வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளது.
No comments:
Post a Comment