Friday, 27 December 2013

நிவாரண முகாமில் 34 குழந்தைகள் சாவு: உ.பி அரசு ஒப்புதல்

நிவாரண முகாமில் 34 குழந்தைகள் சாவு: உ.பி அரசு ஒப்புதல்
உத்தரபிரதேசத்தில் உள்ள முசாபர்நகரில் பெண்ணை கிண்டல் செய்தது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு பின் கலவரமாக மாறியது. இக்கலவரத்தில் பலர் கொல்லப்பட்ட நிலையில் மேலும் பலர் காயமடைந்தனர். 

கலவரத்தினால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அரசின் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டனர். அப்படி முகாமில் தங்கியிருந்த பலரின் குழந்தைகள் இறந்துவிட்ட நிலையில், அம்முகாமிலுள்ள மக்களை சந்தித்து 2வது முறையாக ஆறுதல் சொல்ல வந்த காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி அம்மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மக்கள் அனைவரும் முகாமில் அடிப்படை வசதி இல்லாதது குறித்து கவலை தெரிவித்தனர்.

மக்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், முகாமில் அடிப்படை வசதியின்மை காரணமாக பல குழந்தைகள் இறக்க நேரிட்டதாகவும், உ.பி முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் இவ்விவகாரத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். 

இந்நிலையில் உ.பி அரசு, நிவாரண முகாமில் குழந்தைகள் இறந்தது தொடர்பாகவும், அடிப்படை வசதியின்மை தொடர்பான புகார் குறித்தும் விசாரிக்க உண்மை கண்டரியும் குழுவை நியமித்தது.

அக்குழு முகாமில் உள்ள மக்களை சந்தித்து உண்மை நிலையை கண்டறிந்ததில் சுமார் 39 குழந்தைகள் முகாமில் இறந்துள்ளதாக கண்டுபிடித்துள்ளது. இதில் 10 முதல் 12 குழந்தைகள் வரை முகாமில் மரணமடைந்ததாகவும், 4 குழந்தைகள் நிமோனியா காய்ச்சல் தொடர்பாகவும், மற்ற அனைவரும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும் முகாமில் அடிப்படை வசதிகள் சரியாக செய்யப்பட்டுள்ளதாகவும் அக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment