Friday, 27 December 2013

நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் ; ரஞ்சிதா


பெங்களூரூ: பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது.
இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.

எப்போதும் இங்கேயே இருப்பேன்: தீட்சை பெற்ற ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில்: சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன் என்று தெரிவித்தார்.

காமிராக்கள் பறிப்பு : ரஞ்சிதா சன்னியாசம் பெற்றது குறித்து தகவல் அறிந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை அங்குள்ள சீடர்கள் தடுத்து நிறுத்தியதோடு, புகைப்படக்காரர்களின் காமிராக்களையும் பறித்து கொண்டு அடாவடி செய்தனர். பத்திரிகையாளர்கள் அனைவரும் எதிர்ப்பு குரல் எழுப்ப பின்னர் காமிராவை திருப்பி கொடுத்தனர்.

No comments:

Post a Comment