டெல்லி மாநில தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி குறிப்பிடும்படியான வெற்றி பெற்றுள்ளது. அம்மாநில முதலமைச்சராக கெஜ்ரிவால் பதவியேற்க உள்ள நிலையில் அவரது இல்லத்தின் முன் நேற்று மக்கள் சபை கூட்டத்தை கூட்டியிருந்தார்.
அக்கூட்டத்தில் கலந்து கொண்ட டியோலியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் ஜமீல் அகமது, கெஜ்ரிவால் முன் திடீரென தனது மணிக்கட்டை பிளேடால் கிழித்துக்கொண்டார். அப்போது பேசிய அந்த இளைஞர், விடுதலைப் போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திர போஸ் "ரத்தத்தை கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரத்தை கொடுக்கிறேன்" என்று கூறியிருந்ததை நினைவுபடுத்தினார்.
அது போல் உங்களுக்காக நான் எதுவும் செய்ய தயார். என் உயிரையும் கொடுக்க தயார் என கெஜ்ரிவாலிடம் கூறினார். தனது ஆதரவாளர்களை அழைத்து, உடனடியாக அகமதுவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சை அளிக்கும்படி கூறினார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அகமது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment