கர்நாடக மாநிலம் மங்களூரில் மாணவர்களைக் கடத்தி செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட வைத்து வீடியோ எடுத்து மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:-
22 வயது மருத்துவ மாணவர் தனது நண்பருடன் வியாழக்கிழமை இரவு ஒரு பார்ட்டியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பியிருக்கின்றனர். மங்களூரில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையில் வந்தபோது, அவர்களின் காரை ஒரு கும்பல் வழிமறித்துள்ளது. பின்னர் அவர்கள், மாணவர்களை ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் உள்ள வீட்டுக்கு காரை ஓட்டும்படி மிரட்டியுள்ளனர்.
அந்த வீட்டிற்குச் சென்றதும், நண்பர்கள் இருவரையும் மிரட்டி செக்ஸ் உறவில் ஈடுபட வைத்துள்ளனர். மேலும் அதனை வீடியோ எடுத்த அந்த கும்பல், இன்டர்நெட்டில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment