உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த நிவாரணமுகாம் பகுதியில் நிலவிய குளிரால் ஒருவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஷாம்லி மாவட்டத்திலுள்ள அம்பீதா கிராமத்தில் முசாஃபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண முகாமில், 300 பேர் தங்கியுள்ளனர். தற்போது இப்பகுதியில் நிலவி வரும் கடும் குளிரால், 48 வயது காசநோய் நோயாளி ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முசாஃபர்நகரில் செப்டம்பர் மாதம் நிகழ்ந்த வகுப்புவாத கலவரத்தால், 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதும், 40,000 பேர் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment