தர்மபுரி மாவட்டம், பூதனஹள்ளியைச் சேர்ந்தவர் மாதன், 50; விவசாயி. இவரது மனைவி மாதம்மாள், 45. இந்த தம்பதியின் ஒரே மகன் பெருமாள், 27.குடிப்பழக்கத்துக்கு அடிமையான பெருமாள், விவசாய பொருட்களை விற்பதில் கிடைக்கும் பணத்தை, மாதனிடம் தரமால், செலவு செய்துள்ளார். மேலும் குடிபோதையில், அடிக்கடி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் மாதன், இதை கண்டித்தபோது, தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திர மடைந்த பெருமாள், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, மாதனை வெட்ட முயன்றார். இதைத்தடுத்த, மாதம் மாளை வெட்டினார்.அதிர்ச்சி அடைந்த மாதன், வீட்டில் இருந்து தப்பியோடினார். அவரை பல இடங்கில் தேடிய பெருமாள், வீட்டிற்கு வந்து போதையில் படுத்து தூங்கினார். இந்நிலையில், நள்ளிரவு வீட்டிற்கு வந்த மாதன், தூங்கிக் கொண்டிருந்த பெருமாளை சரமாரியாக வெட்டிக் கொன்றார்; நேற்று காலை, போலீசில் சரணடைந்தார்.
No comments:
Post a Comment