உலகம் முழுவதிலிலும் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு 2013ல் மிக அதிகமாக உள்ளது என ஐ.நா. அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:- போர் காலங்களிலோ அல்லது இயற்கை பேரழிவினாலோ மக்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அல்லது உள்நாட்டுக்குள்யே இடம் பெயர்ந்து போவது என்பது இயல்பானது. அவ்வாறு உள்நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்தவர்கள், புதிதாக அகதிகள் நிலைக்கு உள்ளானவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை மற்ற ஆண்டுகளை விட இந்த 2013ம் ஆண்டில் மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த ஆண்டு சிரியாவில் இருந்தே அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் கடந்த 2012ம் ஆண்டில் 76 லட்ச மக்கள் புலம் பெய்ர்ந்துள்ளனர். இந்த ஆண்டில் முதல் 6 மாதத்திலேயே 59 லட்ச மக்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் விட்டு புலம் பெயர்ந்துள்ளனர். என ஐ.நா. தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment